கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!!

0
53

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!!

 

நேற்று(ஜூலை7) நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின்  பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சரத்குமார் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துளளது.

 

நேற்று அதாவது ஜூலை 7ம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர்  நடைபெற்றது. முதல் பிளே ஆப் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதியது.

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

 

முதலில் விளையாடிய தொடங்கிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆடட்க்காரர் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யு முகிலேஸ் அவர்களும் பி சச்சின் அவர்களும் சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கினர்.

 

அதிரடியாக விளையாடிய யூ முகிலேஸ் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பி சச்சின் அரைசதம் அடித்து 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பினன்ர அகளமிறங்கிய வீரர்களில் அதீக் உர் ரஹ்மான் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது.

 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசி சுபோத் பாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வருண் சகக்ரவர்த்தி, ஆர் அவுசிக், கிசோர் மூவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

194 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை கொண்டு களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 60 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. தொடக்க வீரர் விமல் குமார் 1 ரன்னிலும் மற்றொரு தொடகக் வீரர் சிவம் சிங் 10 ரன்களிலும் பின்னர் களமிறங்கிய ஆதித்யா கணேஷ் 5 ரன்களிலும் ஜி கிஷோர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

பொறுமையாக விளையாடிய பூபதி குமார் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 58 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின்னர் களமிறங்கிய பாபா இந்திரஜித் பொறுமையாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கினார். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாபா இந்திரஜித் அவர்களும் ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தோல்வி உறுதியானது.

 

நான் இருக்கிறேன் என்று இம்பேக் பிளேயராக களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சரத்குமார் சிக்ஸர்களை மட்டுமே அடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாக சிக்சர்களை மட்டுமே குறியாக வைத்து விளையாடிய சரத்குமார் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அதாவது குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்களில் ஷாருக்கனை பின்தள்ளி சரத்குமார் முதலிடம் பிடித்தார்.

 

அதிரடியாக விளையாடிய சரத்குமார் 26 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே அடித்தது.

 

இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி முதல் பிளே ஆப் சுற்றில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதல் அணியாக நுழைந்தது.

 

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 76 ரன்கள் சேர்த்த லைகா கோவை கிங்ஸ் அணியின் பைட்ஸ்மேன் பி சச்சின் ஆட்டநாயகன் விருதை வென்றார். முதல் குவாலிபையர் சுற்றில் தோல்வி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஜூலை பத்தாம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது குவாலிபையர் சுற்றில் விளையாடவுள்ளது.