வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்??
தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது.
இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவ்வாறு செய்யும் இது போன்ற தவறுகளால் பல விதமான ஆபத்துகள் ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இனி கோவை மாவட்டத்திற்குள் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன் படுத்தினால் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற பல நடவடிக்கைகளை கோவை போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வந்த நிலையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி இனி சாலைகளில் வேக அளவீடு கருவிகளை பொறுத்த முடிவு செய்துள்ளது. இந்த கருவியின் மூலம் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியும் .
அறிவிக்கப்பட்ட வேகத்தை மீறி பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதனை கண்டறிய ஸ்பீடு ரேடார் கருவி கோவை மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் பொருத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் அதிவேகத்தில் செல்பவர்களை எளிதாக கண்டறியப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெற்றது.