விஜய் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும்!! தயாரிப்பாளரின் சர்ச்சையான பேச்சு!!

0
40
This is how it will be if Vijay joins politics!! Producer's Controversial Speech!!
This is how it will be if Vijay joins politics!! Producer's Controversial Speech!!

விஜய் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும்!! தயாரிப்பாளரின் சர்ச்சையான பேச்சு!!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் மாணிக்கம் நாராயணன் ஆவார். இவர் தமிழில் சீனு, வேட்டையாடு விளையாடு போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது சில நாட்களாகவே தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித், மணிரத்தினம், ரம்பா ஆகியோரை பற்றி இவர்களால் தான் நான் ஏமாந்து நிற்கிறேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் இவர் தமிழக அரசியலை பற்றி தனது கருத்துக்களைக் கூறி வருகிறார். அரசியல் என்பது சாதி மற்றும் மதத்தை வைத்து பிரித்துப்பார்ப்பதாக கூறியிருக்கிறார். மேலும், இப்பொழுது இருக்கின்ற அரசியலானது மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார்.

காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள் எல்லாம் பொறுக்கிகள் என்றும் கூறியுள்ளார். இவர்களால் ஒரு சாலையை கூட சரியாக போட முடியவில்லை, இவற்றையெல்லாம் மக்கள் தட்டி கேட்க வந்தால் மக்களின் மீதே குற்றத்தைச் சுமத்துகிறார்கள் என்று கூறி உள்ளார்.

அரசியலில் இருப்பவர்களுக்கு அறுபது வயது ஆகிறது என்றும், வயதான இந்த காலத்தில் மனம் திருந்தி மக்களுக்காக நல்லது செய்தால் கூட பரவாயில்லை என்றும் கூறி உள்ளார்.

மேலும், திமுகவின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி அவரது தொகுதியில் நல்லது செய்ததாக செய்தி வந்தது அது அருமை என்று கூறினார்.

இந்த அரசியல்வாதிகள் மக்களிடம் லஞ்சம் வாங்குங்கள் என்றும், லஞ்சத்தை வாங்கிக்கொண்டாவது மக்களுக்கு நல்லதை செய்யுங்கள் என்றும் கூறி வருகிறார்.

இதனிடையே தளபதி விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி பேசிய மாணிக்கம் நாராயணன், “ விஜய் மிகவும் நல்ல பையன், அவரை பெற்றோர்கள் நன்றாக வளர்த்திருக்கிறார்கள், எனவே அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும், சாதி மதம் பார்த்து அரசியல் செய்ய மாட்டார் என்றும் கூறி உள்ளார்.

எனவே விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். அவர் வந்தால் இந்த பாகுபாடு எதுவும் பார்க்காமல் பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் சிறப்பான அரசியல் நடத்துவார் என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறி உள்ளார்.

author avatar
CineDesk