பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் மாணவர்களின் திறனை வெளிபடுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிபடுத்தும் வகையில் இந்த 2023 மற்றும் 2024 ம் ஆண்டிற்கான வட்டார,மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதில் 14 வயது முதல் 19 வயது உட்பட்ட மாணவர்களுக்கு என்று சதுரங்கம் ,உடல் திறன் தேர்வு ,குத்து சண்டை ,ஜிம்னாஸ்டிக் ,வளைய பந்து ,வால் சண்டை ,ஜூடோ,நீச்சல் ,சிலம்பம்,கேரம் போன்ற பல போட்டிகளை நடத்த உள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதற்கான பல வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில் இவை அனைத்தும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இப்பொழுது முதற்கட்டமாக இந்த போட்டிகள் அனைத்து வட்டார அளவில் நடைபெற்று கொண்டு வருகின்றது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த போட்டிகள் மாநில அளவில் நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது.மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடத்த உள்ளது.
இது குறித்த முழு கால அட்டவணையும் தெளிவாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.