ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,

தமிழகத்தினுடைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். தமிழக அரசு செய்து வரும் பணிகளுக்கு தடையாக இருக்கிறார் என்றும், மேலும் சட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாகாலாந்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி முதலில் பதவி வகித்தார். சில காலங்களுக்கு பிறகு அவர் பதவியில் நீக்கப்பட்டார். இப்போது தான் அந்த மாநிலம் நிம்மதியாக இருப்பதாக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் கூறி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளுநராக ஆர்.என் ரவி தமிழகத்திற்கு பொறுப்பேற்றார். அன்று முதல் இவர் திமுக அரசுடன் அரசியல் போரில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் கூறி உள்ளார்.

ஆளுநர் என்றால் அரசியலில் விருப்பு வெறுப்புகள் மற்றும் எதிர்காலத்தை குறித்த எதிர்பார்ப்புகள் இல்லாதவராகவும், உண்மையானவராகவும், மதச்சார்பற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரே ஒரு கட்சியை மட்டும் வளர்க்கும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படக்கூடாது. பாஜக கட்சியை எதிர்க்கும் ஒரு ஆட்சியாக நாங்கள் தமிழகத்தில் இருக்கும் போது, இங்கேயே இருந்துக்கொண்டு எதிர் கட்சிக்கு உதவி செய்பவரை அவர்களின் முகவராகத்தான் எண்ண முடியும்.

ஆளுநரின் இந்த செயல் ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்து விடும். தமிழக மக்களின் சேவைகளுக்கும், நலனுக்கும் தன்னை அர்பணித்துக் கொண்டதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஆளுநர் மீறி விட்டார்.

இதேப்போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ வேண்டுகோள் விடுத்தும் அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

எனவே இவர் ஆளுநர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் அல்ல எனவும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மக்களின் நலனுக்காகவும், சட்டங்களை பாதுகாக்கும் வகையிலும் ஆளுநர் போன்ற ஒரு சிறந்த பதவிக்கு இந்த ஆர்.என்.ரவி இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை எனவும், மேலும் முடிவு குடியரசுத் தலைவரான உங்களுடையது என்று கூறி கடித்தத்தில் தனது உரையை முடித்துள்ளார்.