மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் தினமும் நடந்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த காலி பணியிடங்களானது மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட உள்ளது.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 1021 மருத்துவப் பணியிடங்களுக்கான மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRP) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்தது.
இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மருத்துவப் பணியாளர் பதவிக்கு தகுதி தேர்வினை எழுதினார்கள். இந்த தகுதி தேர்விற்கான முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது.
எனவே முடிவுகள் வெளியான உடனேயே இந்த 1021 மருத்துவக் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவித்திருந்த நிலையில் தற்போது மாருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரிய தேர்வின் மூலமாக இந்த 1021 காலி பணியிடங்களுக்கு தேவையான மருத்துவர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.