மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!!
தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் சேரும்.இந்த வகையில் இந்து சமைய அறநிலையத்துறை சார்பில் அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.
இந்த வருடம் வர இருக்கின்ற ஆடி மாதத்தில் பக்தர்களை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
ஆன்மிக சுற்றுலா சென்னை ,திருச்சி ,மதுரை ,தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களை தலைமை இடம்மாக கொண்டு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சுற்றுலா துறை அதிகாரிகளுடன் ஒருகிணைந்து நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை மானிய கோரிக்கை கூட்டத்தில் மிக முக்கிய நாட்களில் அம்மன் கோவில்களுக்கும் ,வைணவ கோவில்களுக்கும் என்று குறைந்த கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் மத்திய உணவும் வழங்க உள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் மற்றும் கோவில் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இது குறித்து பக்தர்கள் ஏதேனும் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சுற்றுலாத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.மேலும் 044-25333333, 253334444, 1800 4253 1111 இந்த கட்டணமில்ல தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.