ஆறு பேர் கொண்ட ஹெலிகாப்டர் திடீர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!!
நேப்பாள நாட்டில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமாகி விட்டது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு பகுதிக்கு ஆறு பேருடன் சென்றது.
இதனையடுத்து திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை இந்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை. ஒருவேளை ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளாகி விட்டதா என்பதையும் தேடி வருகின்றனர்.
நேபாளம் இந்தியாவில் உள்ள இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்
நேபாளத்தில் இருந்து காத்மாண்டு நோக்கி ஆல்டிடியூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதில் ஒரு நோயாளி மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தமாக ஆறு பேர் பயணம் செய்தனர்.இது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகி விட்டது.
இது குறித்து தேடும் பணி தீவிரமடைந்தது. சில நாட்களுக்கு பிறகு இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் தாடிங், நுவாகாட் மாவட்டங்களை ஒட்டி உள்ள ஒரு அடர்ந்த காட்டில் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஆறு பேரும் உயிரிழந்தனர்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புப் பணியினர் இவர்களின் உடலை மீட்டு எடுத்துச் சென்றனர்.இந்த விபத்திற்கான காரணம் தெரியாமல் விசாரணை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.