நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!!

Photo of author

By CineDesk

நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!!

ஐஸ்லாந்து தலைநகரில் உள்ள ரெயக்யவிக் பகுதியில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரெயக்யவிக் பகுதியில் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக கூறி உள்ளது.

நாட்டின் தெற்கு பகுதியில் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிமலை சீற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதில் பல நில நடுக்கங்கள் மிதமான அதாவது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பால் நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இந்த நிகழ்வால் மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்த எரிமலை வெடிப்பினால் அந்த பகுதி முழுவதும் புகை வெளியேறி புகை மண்டலமாக மாறி உள்ளது. இதைப்போலேவே, கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடித்தது.

இதனால் ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த விமான ரத்தால் சுமார் ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

இதையடுத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளிலும் இதுப்போல எரிமலை வெடிப்பு நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.