அவர் போதைப் பொருள் போன்றவர்! எல்ஜிஎம் இசை வெளியீட்டு விழாவில் எம்.எஸ் தோனி பேச்சு!!

0
40

அவர் போதைப் பொருள் போன்றவர்! எல்ஜிஎம் இசை வெளியீட்டு விழாவில் எம்.எஸ் தோனி பேச்சு!!

 

எம்.எஸ் தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர் ஒருவரை போதைப் பொருள் போன்றவர் என்று நேற்று(ஜூலை11) நடைபெற்ற எல்ஜிஎம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலாய்த்து பேசியுள்ளார்.

 

எம் எஸ் தோனி அவர்களின் சினிமா தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது முதல் திரைப்படமாக தமிழ் மொழியில் உருவாகியுள்ள திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு எல்.ஜி.எம் அதாவது லெட்ஸ் கெட் மேரிட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் நடிகை இவானா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், நதியா, மிர்ச்சி விஜய், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்குளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற எல்.ஜி.எம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  படத்தின் தயாரிப்பாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சஹார் அவர்களை பற்றி பேசியுள்ளார்.

 

எல்.ஜி.எம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எம்.எஸ் தோனி அவர்கள் தீபக் சாஹர் அவர்களை பற்றி “தீபக் சாஹர் ஒரு போதைப் பொருள் போன்றவர். அவர் நம்முடன் இருந்தால் இவர் ஏன் இங்கு இருக்கிறார் என்று தோன்றும். அவர் இல்லை என்றால் அவர்எங்கு போனார் என்று தேடத் தோன்றும். தீபக் சாஹர் அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற ஒரு பக்குவம் இல்லை. அவர் பக்குவம் அடைய நீண்டகாலம் ஆகும். எனது மகள் ஷிவா 8 வயதில் கொண்டுள்ள பக்குவத்தை தீபக் சாஹர் அவர்கள் அடைவதற்கு அவருக்கு 50 வயது ஆகும். ஒயின் ஈவ்வ்று நாளாக நாளாக சிறப் பெறுமோ அது போலத்தான் தீபக் சாஹர் அவர்களும் நாளாக நாளாக அந்த பக்குவத்தை பெற்று விடுவார். அந்த ஒயினை என்னால் குடிக்க முடியாது. தீபக் சாஹர் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்” என்று கலாய்த்து பேசியுள்ளார்.