தவறான பாதையில் வந்த பள்ளி வாகனம்!! கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்!! 

தவறான பாதையில் வந்த பள்ளி வாகனம்!! கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்!! 

பள்ளி பேருந்து ஒன்று தவறான பாதையில் சென்றதால் கார் மீது மோதி 6பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரு காரில் பயணம் செய்தனர். அவர்களின் காரானது மீரட்டில் இருந்து குருகிராம் சென்று கொண்டிருந்தது. அந்த கார் காலை 6 மணி அளவில் காசியாபாத் பகுதியில் சென்ற போது திடீரென தவறான பாதையில் வந்த பள்ளி பேருந்து ஒன்று கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அடுத்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் பள்ளி பஸ்ஸில் யாரும் மாணவர்கள் இல்லாத நிலையில் டிரைவர் சுமார் 8 கி.மீ  தூரம் தவறான பாதையில் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. பிறகு கைது செய்யப்பட்ட பள்ளி வாகனத்தின் ட்ரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.