சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள்.
இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் பத்தொன்பதாம் தேதி சுற்றுலாப்பயணிகள் இதற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
எனவே, இந்த நீர்வீழ்ச்சியின் நுழைவு வாயிலை மூடி வனத்துறையினர் இதற்கு தீவிர பாதுகாப்பு கொடுத்து கண்காணித்து வந்தனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து விட்டது. எனவே, சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இந்த நீர்வீழ்ச்சிக்கு வரலாம் என்று வனத்துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, சுற்றுலா அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
மேலும், இந்த நீர்வீழ்ச்சியில் வரக்கூடிய நீரின் அளவையும் எப்போதுமே கண்காணித்துக் கொண்டே இருப்பதற்காக தனி குழு அமைப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாபயணிகள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லாமல் இருக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள் என்றும் வனத்துறையினர் கூறி உள்ளனர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிரப்பார்க்கப்படுகிறது.