தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை தடுக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 275 ஆக உள்ளது. இதேபோன்று தென்கொரியா, சிங்கப்பூர். பாகிஸ்தான், மெக்சிகோ மொரிஷியஸ் நாடுகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால் உலகில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தையும் இந்த கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 6 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும் இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கபட்ட இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் ரயில் நிலையங்கள், விமான நிலையம் , துறைமுகம் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.