ஒரே நாளில் 793 பேர் பலி! உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா!!
உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று கிருமியால் ஒரே நாளில் 793 பேர் பலியான கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இதுவரை உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,000 பேரை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து மேலும் அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டில் இதுவரை 4800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஒரே நாளில் 793 பலியாகியுள்ளதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவம் உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தும் வகையில் நடைபெற்றுள்ளது.
- ஈரான் நாட்டில் இதுவரை 20,610 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
1,566 பேர் உயிரிழந்துள்ளனர். - ஸ்பெயின் நாட்டில் 25,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1375 பேர் தொற்று அதிகமாகி பலியாகியுள்ளனர்.
- பிரான்ஸ் நாட்டில் இதுவரை 562 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இங்கிலாந்தில் 178 பேரும், இந்தியாவில் 5 பேரும் இறந்துள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என்றாலும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கொரோனாவை விரட்டும் விதமாக இன்று இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்ற அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊடகம், பத்திரிகை மற்றும் சமூகவலைதளங்கள் உட்பட பல்வேறு தரப்பில் விழிப்புணர்வு உண்டாகி வருகிறது.