நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!!

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!!

முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இணைந்து பின்பு திரையுலகில் அடி எடுத்து வைத்த ஒரு நடிகை தான் ஸ்ரேயா ரெட்டி. இவர் நடிகர் விஷாலின் அண்ணி ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனையடுத்து விஷாலின் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார்.

இத்திரைப்படத்தில் இவர் எவருக்கும் பயப்படாத ஒரு திமிரான பெண்ணாக, அனைவரையும் அடக்கி ஆளும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தில் இவர் பேசிய “ஏலே இசுக்கு” என்னும் வார்த்தை அனைவரின் ஈர்ப்பையும் தூண்டியது.

இந்த திமிரு படத்தை தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று இருந்த நிலையில் பெரிதாக சொல்லும்படி வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

குறிப்பாக திமிரு படத்தில் இவர் விஷாலுடன் ஆடிய நடனத்தை பார்த்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் ஐட்டம் டான்ஸ் ஆட அழைத்தார்கள்.

ஆனால் இவருக்கு நடிப்பில் தான் ஆர்வம் மிகுந்து இருந்தது எனவே, என்னால் முடியாது என்று கோவமாக கூறி விட்டார். இவர் நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இவரின் அழகு மற்றும் உடல் அமைப்பைக் கண்டு இவரை டான்ஸ் ஆடுவதற்கு மட்டுமே அழைத்தனர்.

எனவே, நமக்கு சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து கடைசியாக விஷாலின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.