விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!
தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை முதற்கொண்டு அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் இருநூறு வரை விற்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது, மற்ற காய்கறிகளான பீன்ஸ், கேரட், இஞ்சி முதலியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், மளிகை பொருட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று அனைத்து பொருட்களின் விலையுமே தற்போது தாறு மாறாக அதிகரித்து வருகிறது.
இதற்கு திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
https://twitter.com/OfficeOfOPS/status/1679776051625603073
இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இந்த விலைவாசி உயர்வு மக்களை பெருமளவில் பாதிக்கக்கூடும் என்பதால் விரைவில் இதகொரு தீர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், விலைவாசி அதிகமானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளதாக பல்வேறு கட்சி பிரமுகர்களும் கூறி வருகின்றனர்.