ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

0
33
Biggest Jackpot for Ration Card Holders !! Tamilnadu government allocated 200 crore!!
Biggest Jackpot for Ration Card Holders !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசானது இந்த திட்டத்திற்கு சுமார் 200 கோடி ரூபாயை ஒத்துகியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி ,சேலை வழங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த திட்டத்தில் 1,68,00,000 என்ற எண்ணிக்கையில் சேலைகள் அதன்பின்பு  1,63,00,000 என்ற எண்ணிக்கையில் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது என்றும்  அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை குறித்து தலைமை செயலாளர் ,வருவாய்த் துறை அதிகாரிகள் ,கூட்டுறவு துறை அதிகாரிகள் ,நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் கைத்தறி ஆணையர் என்று அனைவரும் அடங்கிய குழுவை அமைத்துள்ளனர்.

 வேட்டி ,சேலைகள் அனைவருக்கும் முறையாக வழங்கப்படுகிறத என்பதை உறுதி செய்ய அனைத்து நியாவிலை கடைகளிலும் கை ரேகையை பதிவு செய்து அதன் பிறகு விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இது சரியாக செயல்படுகின்றதா என்பதை உறுதி செய்யும் விதமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K