அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!!
7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7மணியிலிருந்து சோதனை செய்து வருகிறார்கள். இதனால் திமுகாவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.செம்மண் குவாரி முறைகேட்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக விசாரணை என முதற் கட்ட தகவல் வெளிவந்துள்ளது.
அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரெய்டு என தகவல்.
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உள்ள உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். CRPF காவலர்களின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறதாக சொல்லப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி பொன்முடிக்கு சொந்தமான விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் மற்றும் பிற இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய சூர்யா கல்லூரி, உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடி போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை தமிழ்நாட்டின் முக்கிய துறைகளின் அமைச்சராக பொன்முடி பதவி வகுத்து வருகிறார். 2021ல் திமுக ஆட்சியை பிடித்த பிறகு, தற்போது அவர் உயர்கல்வி அமைச்சர் பதவி வகித்து வருகிறார்.
ஏற்கனவே ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது அது தொடர்பான பரபரப்பே இன்னும் முடியாத நிலையில், தற்போது பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல ஆவணங்கள் சிக்கும் எனவும் அவர் கைது செய்யப்படுவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.