குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000!! உடனடியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!!
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது சித்தராமையா பதவி வகித்து வருகிறார். இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அதில் ஒன்று தான் வருகின்ற ஜூலை பத்தொன்பதாம் தேதி ஆரம்பிக்க உள்ள கிருஹலட்சுமி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டம் மகளிருக்கு மிகவும் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒவ்வொரு வீட்டின் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் இரண்டாயிரம் போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கான ஆவணங்களான,
ரேஷன் அட்டை, கணவன் மனைவி இரண்டு பேரின் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண் முதலியவை தேவைப்படும்.
இதற்கு பதிவு செய்வதற்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும்.
எனவே, அவர்களுக்கென்று கூறப்பட்ட தேதியில் சேவா கேந்திரா, பெங்களூர் ஒன் இல்லையென்றால் கர்நாடகா ஒன்று மையத்திற்கு சென்று அனைவரும் பதிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை, இது குறித்த செய்திகள் குறுஞ்செய்தியின் மூலமாக வரவில்லை எனில் 19002 என்ற எண்ணிற்கு அழைத்தும் பதிவு செய்துக் கொள்ளலாம்.
எனவே, அனைத்து குடும்பத் தலைவிகளும் இதில் பதிவு செய்து உடனடியாக இந்த இரண்டாயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளுமாறு கர்நாடகா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.