மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தி!! தாய் செய்த விபரீத செயல் நெஞ்சை உலுக்கிய பின்னணி!!

0
28
Frustration of not being able to pay my son's college fees!! The heart-wrenching background of the perverse act done by the mother!!
Frustration of not being able to pay my son's college fees!! The heart-wrenching background of the perverse act done by the mother!!

மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தி!! தாய் செய்த விபரீத செயல் நெஞ்சை உலுக்கிய பின்னணி!! 

மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்ற சோகத்தில் தாய் ஒருவர் செய்த காரியம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என முன்னோர்கள் கூறியது எப்போதும் பொய்த்தது இல்லை. தாயின் அன்பிற்கு இந்த உலகில் எதுவும் ஈடாகாது. அதனால் தான் தெய்வத்தை விட தாயை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்.

அதை போல ஒரு தாய் தனது மகனை படிக்க வைக்க முடியாத துயரத்தில் தன் உயிரையும் துச்சமெனக் கருதி செய்த செயல் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருக்கிறது. துயரமான இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் பாப்பாத்தி வயது 46. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்துவருகிறார் . கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் ஒன்று மோதியதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியில்  உள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்த போது, சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்று உள்ளார். ஆனால் திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மோதி   பாப்பாத்தி கீழே விழுவதும் , அதன் பின்னர்  2வதாக வந்த பஸ்சின் முன்பு ஓடிச்சென்று, கீழே  விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதில் அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் விழுந்தது உறுதியானது. மேலும் விசாரணை செய்ததில் பல உருக்கமான தகவல்கள் வெளிவந்தன. பாப்பாத்தியின் மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் தற்போது மகனும் கல்லூரி படித்து வருகிறார். அவருக்கு ரூ.45000 கல்விக் கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில் பாப்பாத்தி அக்கம் பக்கத்தினரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இதனால் அவர் மனமுடைந்த நிலையில்  காணப்பட்டு உள்ளார். இந்த சூழலில்  யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் வேலை மகனுக்கு கிடைக்கும் என கூறி உள்ளனர்.

இதன் காரணமாக பாப்பாத்தி பஸ் முன்பு பாயிந்து தற்கொலை செய்ததது தெரிய வந்துள்ளது. மகனின் படிப்புக்காக உயிரை துச்சமென மதித்த தாயின் செயல் அனைவரையும் கலங்கச் செய்வதாக இருந்தது.