வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!!
தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவு துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது.
நாம் ஏதேனும் நிலம், வீட்டு மனை, வீடு போன்றவை வாங்க வேண்டுமானால், அதன் முந்தைய உரிமையாளர்கள் குறித்து ஆலோசனை செய்து, மேலும் அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு சான்றிதழ் தான் வில்லங்க சான்றிதழ்.
இந்த சான்றிதழில் சொத்து யாரிடம் இருந்து யாருக்கு மாற்றப்பட்டு உள்ளது, அந்த சொத்து யாருடையது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். சொத்தில் ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, உரிமையாளர் பெயர், பத்திரத்தின் ஆவன எண், சொத்தின் வகைப்பாடு முதலியவற்றை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
தற்போது இந்த வில்லங்க சான்றிதழை ஆன்லைனிலேயே சுலபமாக பெற்றுக் கொள்ள அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது. இதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் போது இரண்டு அல்லது மூன்று நாட்களில் வில்லங்க சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால் சார் பதிவாளர் அலுவலகங்கள் மாலை 4 மணிவரை மட்டுமே செயல்படுகிறது.
இதனால் 4 மணிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இரண்டு நாட்களில் சான்றிதழ் கிடைக்கிறது. 4 மணிக்கு மேலே விண்ணப்பிப்பவர்களுக்கு வில்லங்க சான்றிதழ் கிடைக்க தாமதாமாகிறது.
இதற்காக தான் பத்திரப்பதிவுத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த நாள் கணக்கில் சேர்க்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவாக சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் சார் பதிவாளர்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.