கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

0
100
Cell phones should not be used in temples!! This is the reason!!
Cell phones should not be used in temples!! This is the reason!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் .

தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை  ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு  செல்கின்றனர்.

அந்த நிலையில் தமிழக அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புனித தலங்களுக்கு அதிக அளவில் செல்போன் கேமரா போன்ற உபகரணங்களை மக்கள் எடுத்து செல்கின்றனர்.

இந்த உபகரணங்களால் கோவில்களின்  உள்ள புனித தன்மை இழக்கப்படுகின்றது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனால்  செல்போன் மற்றும் கேமரா போன்ற பொருட்களை கோவில்களுக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

பொதுமக்கள் இந்த செல்போன்கள் மற்றும் கேமராக்களை எடுத்து வருவதன் மூலம் கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ,வருகின்ற பக்கதர்களுக்கு மிகவும் அசவுகரியமாக உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

இதனால் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இனி அனைத்து கோவில்களுக்கும் செல்போன் ,கேமரா போன்ற உபகரணங்களை உபயோகிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.

அந்த வகையில் இனி செல்போனை எடுத்து செல்லும் பக்தர்கள் அவர்களது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் இதற்காக  விழிப்புணர்வு தரும் வகையில் அனைத்து கோவில்களிலும் செல்போன்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டது போன்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

Previous articleமருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!
Next articleமுதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!!