சமூக சேவை செய்பவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தமிழக அரசு விருது உடனே விண்ணப்பியுங்கள்!!
இந்த நிலையில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழா நடு முழுவதும் கோலாகலமாக கொண்டப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நாளில் மத்திய அரசும் மாநில அரசும் சமுதாய வளர்ச்சிக்கு போரடமும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வர்லர்கள் அவர்களை சிறப்பிக்கும் வகையில் பல விருதுகளை வழங்கும். மேலும் அந்த நாளில் நாட்டு வளர்ச்சிக்காக பணியாற்றிய அனைவருக்கும் பரிசு வழங்கப்படும்.
இந்த நிலையில் தமிழக முதலவர் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. மேலும் விருது மட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதனையடுத்து இந்த விருது பெற தகுதி உள்ளவர்கள் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் அன்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த விருது பெறுவதற்கு பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் இந்த விருது பெற தமிழக குடி உரிமை பெற்று இருக்க வேண்டும். மேலும் 2022 ஆம் ஆண்டு செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அதனையடுத்து மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள், பல்கலைகழகங்களில் பணியாற்றுபவர்கள் விண்ணபிக்க தகுதி அற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் பின் www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.