நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!!
பிரபல நடிகை குறித்து அவதூறு பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தமிழில் சங்கமம் என்ற படத்தில் அறிமுகமாகி பிரபல நடிகையாக இருப்பவர் விந்தியா. தற்போது இவர் அதிமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
அதேபோல் திமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஒன்றில் நடிகை விந்தியா பற்றி அவதூறு கருத்து கூறியுள்ளார்.
இது இணையதளத்தில் வைரலாகவே அதிமுகவின் சட்ட ஆலோசகரும் வக்கீலுமான இன்பதுரை நடிகை விந்தியாவின் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். அதில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இதனுடன் சான்றாக குடியாத்தம் குமரன் பேசிய வீடியோவும் இணைக்கப்பட்டது. இது குறித்து மகளிர் தேசிய ஆணையம் ஆய்வு செய்தது. பின்னர் சென்னை போலீஸ் நிலையத்திற்கு மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இதன் பேரில் சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கைத் தாக்கல் செய்தனர்.
இதை எடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வரும் குமரனை கைது செய்வதற்கு போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை குஷ்பூ பற்றி அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.