அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்திய அணியானது அடுத்ததாக அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்திற்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அறிவிக்கப்பட்டது.
எனவே, அடுத்து அயர்லாந்துடன் விளையாட உள்ள டி20 ஆட்டத்திற்கும் இந்த இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியே நியமிக்கப்படும் என்று கூறி இருந்த நிலையில்,
தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, அயர்லாந்துக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் முதலியவர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
அதிக வேலை பளுவின் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு நன்றாக தயாராக வேண்டும் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேப்போல், சுப்மன் கில்லிற்கும் ஓய்வு தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா –விற்கு ஓய்வு அளிக்கப்பட்டால் கேப்டனாக யார் வருவார் என்று அனைவரிடமும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது.
எனவே, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் ஹர்திக் விளையாடி விட்டு எவ்வாறு உணர்கிறார் என்பதை பொறுத்து இந்திய அணிக்கான தேர்வு அமையும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஐம்பது ஓவர் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.