செவ்வாய் கிழமை விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழர்களின் பழைய நாகரிகங்களையும் அவர்களது பண்பாட்டையும் உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக இருக்கின்ற ஒன்று தான் கீழடி அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமானது முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கீழடி அருங்காட்சியகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டத்தில் அமைந்திருக்கின்ற கொந்தகை எனப்படும் கிராமத்தில் உள்ளது.
ஒரு தொல்லியல் அகழ்வைப்பகமான இதை, பார்ப்பதற்கு உள்ளூரில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை பறைசாற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், இதில் வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் நீர் மேலாண்மை, வேளாண்மை குறித்த தொல்பொருட்கள் என அனைத்தும் பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏராளமான பழமை தகவல்களை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறையாக வெள்ளிக்கிழமை இருந்து வந்தது.
ஆனால், தற்போது வெள்ளிக்கிழமைக்கு பதிலாக செவ்வாய் கிழமை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
அதாவது, ஆறு மணி வரை நடைபெற்ற இந்த அருங்காட்சியகமானது இனி வார இறுதி நாட்களில் ஒரு மணிநேரம் அதிகமாக ஏழு மணிவரை திறக்கப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.