இந்த டானிக் போதும்!! அல்சர் நெஞ்செரிச்சல் வாயுதொல்லை அனைத்தும் நொடியில் குணமாகும்!!

Photo of author

By CineDesk

இந்த டானிக் போதும்!! அல்சர் நெஞ்செரிச்சல் வாயுதொல்லை அனைத்தும் நொடியில் குணமாகும்!!

சிலருக்கு சாப்பிட்ட உடனேயே நெஞ்சில் இருந்து எது களித்துக் கொண்டிருக்கும். அதாவது புளி ஏப்பம் வந்து கொண்டே இருக்கும் நெஞ்செரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சரியான முறையில் செரிமானமும் நடக்காது. கொஞ்ச நாள் வயிறு உப்புசம் வாயு தொல்லை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் வெறும் மூன்றே பொருளை வைத்து வீட்டிலேயே ஒரு அற்புதமான டானிக் செய்து சாப்பிட முடியும். அதை எவ்வாறு செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சீரகம்
ஓமம்
இஞ்சி

செய்முறை:
1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் ஓமத்தை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

2. வறுக்கும் போது இந்த இரண்டு பொருளும் சிறிதளவு பொரியும்போது ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

3. இந்த தண்ணி நன்றாக கொதித்து வரும்போது இதனுடன் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. பிறகு இந்த ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணி அரை கிளாஸ் செலவாக மாறும் வரை நன்றாக கொதிக்க வைத்து ஒரு டானிக் பக்குவம் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு இதை வடிகட்டி எடுத்துக்கொண்டு, ஆற வைக்கும் குடித்து வரலாம் அல்லது பிரிட்ஜில் வைத்தும் பத்து நாட்களுக்கு குடித்து வரலாம். பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது அதன் குளிர் போன பிறகு குடிக்க வேண்டும். இதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தாராளமாக குடித்து வரலாம்.

உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது எதுக்களித்துக் கொண்டிருக்கிறது நெஞ்செரிச்சல் இருக்கிறது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் அவதி ஏற்படுகிறது என்று நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் இந்த டானிக் செய்து குடித்து வர உடனடியாக சரியாகும்.

இதை குடித்த 5 லிருந்து 10 நிமிடங்களிலேயே பிரச்சனை தீர்ந்துவிடும். மேலும் இதை வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வர நெஞ்சரிச்சல் மலச்சிக்கல் வயிறு உப்பசம் செரிமான கோளாறு எதுக்களிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். இந்த டானிக் குடிப்பதனால் எந்த ஒரு பக்க விளைவுகளோ ஏற்படாது.

மேலும் இந்த டானிக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடித்து வரலாம் இவ்வாறு குடித்து வர செரிமான பிரச்சனை வயிறு உப்பசம் பிரச்சனை குறிப்பாக வாயு தொல்லை இருக்கவே இருக்காது.