காமராஜர் விருது பரிசு தொகை மாணவர்களுக்கு குட் நியூஸ் !! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனையடுத்து அதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் 25 பேரை தேர்வு செய்து வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தற்போது தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து விருது வழங்க உள்ளது. அந்த விருதுகளை பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருது வழங்க உள்ளது. மேலும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பட்டியல்களை ஆசிரியார்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்களிவி துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விருதுகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வழங்கப்பட உள்ளது. ஆனால் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். மேலும் இந்த விருது கல்வி செயல்பாடுகள் மற்றும் தனி திறன்களை ஊக்குவித்து போட்டி தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதனையடுத்து இந்த விருது ஒவ்வொரு மாவட்டங்களிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் மற்றும்12 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேருக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10,000 ரூபாய் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.