மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!!

0
32
Good news for students!! Super Offer of Metro!!
Good news for students!! Super Offer of Metro!!

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!!

கொச்சி மெட்ரோவில் தினம்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை ஒன்று நடைமுறையில் உள்ளது.

இதன் மூலமாக மெட்ரோவில் குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும். மேலும், பீக் ஹவர் இல்லாத சமயங்களில் காலை 5.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்,

பிறகு பத்து மணி முதல் பதினொரு மணி வரையிலும் ஐம்பது சதவிகிதம் கட்டண சலுகையோடு பயணம் செய்து வரலாம். இதில் மொத்தமாக ஏழு திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக கொச்சி மெட்ரோவில் புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்தில் எப்படி பஸ் பாஸ் எடுக்கிறோமா, அதைப்போலவே இந்த மெட்ரோவிலும் பாஸ் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு வித்யா 40 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் மொத்தம் நாற்பது நாட்களில் ஐம்பது முறை பயணம் செய்து கொள்ளலாம்.

இதற்கான கட்டணம் 495 என்ற நிலையில், எந்த ஒரு ரயில் நிலையத்திலிருந்தும் மற்றொரு ரயில் நிலையத்திற்கு ஈசியாக செல்லலாம். இந்த திட்டத்தில் ஒரு பயணத்திற்கு பத்து ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது.

மேலும், இத்திட்டம் இருபத்தைந்து வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்த மாணவர்களின் ஐடி கார்டு தேவைப்படும்.

எனவே, இந்த அத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்று எதிரப்பார்ர்கப்ப்டுகிறது.

author avatar
CineDesk