வாகன முகப்பு விளக்குகளில் “கருப்பு ஸ்டிக்கர்”!! விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர்!!

0
130
“Black sticker” on vehicle headlights!! Traffic police to create awareness!!
“Black sticker” on vehicle headlights!! Traffic police to create awareness!!

வாகன முகப்பு விளக்குகளில் “கருப்பு ஸ்டிக்கர்”!! விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர்!!

தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது.

இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் பல விதமான ஆபத்துகள் ஏற்படுகின்றது.

இதனை தடுக்கும் விதமாக கோவை மாவட்டத்தில்  இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இனி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன் படுத்தினால் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது போன்ற பல நடவடிக்கைகளை  போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வந்த நிலையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது வாகனத்தில் உள்ள முக்கப்பு விளக்குகள் அதிக அளவில் ஒளிருட்டப்பட்டு கண்கள் கூசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதனை தடுக்க போலீசார் புதிய பணியில் ஈடுபட்டு வருகினார்கள்.

இனி அதிக ஒளிருட்டப்படும் முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுபடுத்தும் விதமாக அதன் மேல் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர்.இதனை தொடர்ந்து முக்கிய சிக்னல்களில் இது குறித்த விழிப்புணர்வும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

Previous articleமீண்டும் தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!
Next articleபொதுமக்களே உஷார்! மீண்டும் அதிவேகமாக பரவிவரும் காய்ச்சல்!! ஒரே நாளில் 2292 பேருக்கு பாதிப்பு வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!