புதிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ள “ட்விட்டர்”!! எலான் மஸ்க் திடீர் முடிவு!!

Photo of author

By CineDesk

புதிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ள “ட்விட்டர்”!! எலான் மஸ்க் திடீர் முடிவு!!

CineDesk

தலைகீழாக மாறும் ட்விட்டர்.. புதிய பெயர், புதிய லோகோ.. அது என்ன "எக்ஸ்"? எலான் மஸ்க் பரபர முடிவு Read more at: https://tamil.oneindia.com/news/chennai/twitter-to-get-x-logo-today-name-also-to-be-changed-soon-says-elon-musk-523465.html?story=3

புதிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ள “ட்விட்டர்”!! எலான் மஸ்க் திடீர் முடிவு!!

உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பது தான் ட்விட்டர் நிறுவனம். ட்விட்டரை சில மாதங்களுக்கு முன்புதான் எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கினார்.

இவர் டிவிட்டரில் கால் பதித்த உடனேயே அதில் சிஇஓ உள்ளிட்ட பலரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யப்படும் முறையும் நீக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் புளூ டிக் நீக்கப்படுவதாக கூறப்பட்டது. இனி புளூ டோக் வேண்டுமென்றால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது.

இதனால் பலருக்கு ட்விட்டரில் இருந்த புளூ டிக் நீக்கப்பட்டது. மேலும், ஒரு மாதத்திற்கு புளூ டிக் இருக்க 900 ரூபாய் செலுத்தும்படி கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தற்போது ட்விட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றுவதாக எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

எனவே, X.COM என்னும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தொட்ட உடனேயே அது நம்மை டிவிட்டருக்கு கொண்டு செல்லும். மேலும், இத்தனை நாட்களாக டிவிட்டருக்கு அடையாளமாக இருந்த பறவை சிம்பல் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக எக்ஸ் சிம்பல் கொண்டுவரப்பட இருக்கிறது.

தற்போது இதற்கு போட்டியாக இருக்கும் வகையில் “திரெட்ஸ்” என்னும் வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஒரு கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இந்த திரேட்ஸ் வலைத்தளம் குறித்து ஒருவர் இது டிவிட்டரின் பிரதி என்று கூறி உள்ளார்.

தற்பொழுது 100 மில்லியனுக்கும் மேலான பயனர்களை பெற்றுள்ள திரெட்ஸ் நிறுவனமானது, டிவிட்டரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு எழுந்துள்ளது.

டிவிட்டரின் விரத்தக ரகசியங்களையும், பிற அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக மெட்டா பயன்படுத்தி இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், டிவிட்டரின் ரகசியங்கள் மற்றும் உயர் தகவல்களை அறிந்த முன்னாள் ஊழியர்கள் சிலரை மெட்டா பணியில் அமர்த்தி உள்ளது என்றும் ட்விட்டர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பதில் அளித்த திரெட்ஸ் நிறுவனம் டிவிட்டரின் ஊழியர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். எவ்வளவு சமூக வலைதளங்கள் இருந்தாலும், ட்விட்டர் தனது முதல் இடத்தை இதுவரை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால் தற்போது மெட்டா நிறுவனத்தின் இந்த திரெட்ஸ் செயலி இதற்கு போட்டியாக களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.