திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!!

0
107
IRCTC website down suddenly!! Passengers suffer a lot!!
IRCTC website down suddenly!! Passengers suffer a lot!!

திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!!

நாடு முழுவதும் மக்களுக்கு ஏராளமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர்.

தொலைதூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். பயணம் செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம்தோறும் அதிக அளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். அதைத் தடுப்பதற்காக சிறப்பு ரயில்களை ஒவ்வொரு வருடமும் ஏற்ப்பாடு செய்து வருகின்றனர்.

மேலும், விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு முன்னரே டிக்கெட் புக் பண்ணும்படி முன்பதிவு வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு ரயிலில் முன்பதிவு செய்வதற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு இணையதளம் தான் ஐஆர்சிடிசி.

இந்த இனையதளத்தில் அடுத்த நாள் பயணம் செய்வதற்கு ஏசி வகுப்பிற்கான முன்பதிவு பத்து மணி என்ற அளவில் துவங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பதினொரு மணிக்கு துவங்கும்.

இதில் முன்பதிவு செய்வதற்கு சிறிது நேரம் தாமதித்தால் கூட அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில், தற்போது ஐஆர்சிடிசி இணையதலமானது நாடு முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு திடீரென்று இணையம் முடங்கியதால் நீண்ட தூரம் செல்வதற்கு முன்பதிவு செய்யும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மீண்டும் எப்பொழுது இது நடைமுறைக்கு வரும் என்று தெரியாததால் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Previous articleபொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!! 
Next articleமனைவியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய போலிஸ் அதிகாரியின் தற்கொலை…