எனது உடலை அழகாய் படைத்தது கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!!
பிரபல நடிகை ஒருவர் தான் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை எனவும் சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி எனது அழகை பராமரிக்கிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஹனி ரோஸ். கடந்த 2005 -ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உடன் வீரசிம்மரெட்டி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றதால் இவர் ஆந்திராவில் மிகவும் பிரபலமானார். மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
இந்த நிலையில் ஹனீரோஸ் அழகாக இருப்பதற்கு ரகசியம் அவர் செய்துள்ள அறுவை சிகிச்சைகள்தான் என்று சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் வெளிவந்தன. இதையடுத்து அந்த விமர்சனங்களுக்கு ஹனீரோஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. சில பவுடர்கள் மட்டுமே பயன்படுத்தி எனது அழகை பராமரித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் நான் எந்தவித அழகு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. கடவுள் தந்த அழகைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. அழகை பராமரிக்க சில பவுடர்களை பயன்படுத்துகிறேன். இவை அனைத்தும் கண்டிப்பாக தேவை. மேலும் நடிகையாக இருந்து கிளாமர் துறையில் பணியாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. நம் உடலை பராமரிப்பது பெரிய விஷயம். அந்த அழகான உடலை அழகாய் படைப்பது கடவுளே என்று கூறியுள்ளார்.