தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!! 

விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கர் தக்காளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம்  கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் என்ற தாலுகாவிற்கு உட்பட்டது சங்கீதஹள்ளி எந்த கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடேஷப்பா என்பவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். தக்காளி பழங்கள் நன்கு வளர்ந்து சாகுபடிக்கு தயாராக இருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரும் மர்ம நபர்கள் வெங்கடேஷப்பாவின் தோட்டத்தில் புகுந்து அங்கு இருந்த தக்காளி பழங்களை பறித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் தனது விளைநிலத்திற்கு சென்ற வெங்கடேஷப்பா தக்காளி திருடப்பட்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். தக்காளியோடு காய்கறிகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது பற்றி சீனிவாசப்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தக்காளியை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கோலார் ஏ.பி.எம்.சி மார்க்கெட்டுக்கு தக்காளி கொண்டு சென்ற விவசாய தாக்கி 2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.

இந்த வழக்கில் தமிழக தம்பதி கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாநில முழுவதும் பல இடங்களில் தக்காளி திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தக்காளியின் விலை உயர்வால் தான் இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது தெரிகிறது. என்று கூறிய போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்வோம் என தெரிவித்தனர்.