இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்??
வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் துவங்க இருக்கிறது. இதன் முதல் போட்டி இங்கிலாந்திற்கும், நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். அதில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்ந்துள்ளனர்.
இந்திய அணியில் கேப்டனாக ரோகித் ஷர்மா மேலும், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், தவான் ஆகிய முன்னணி வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவரது அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் சேர்த்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் சில நாட்களாக விளையாடாமல் இருகின்றனர்.இருப்பினும் இவர்களை வாசிம் ஜாவர் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவிற்கான முதல் உலகக் கோப்பை ஆட்டமானது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் அக்டோபர் எட்டாம் தேதி நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி அன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இதன் இறுதி போட்டி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.