தொழிற்சாலை கட்டுமான பணி!! மேற்பார்வையில் ஈடுபட்ட இன்ஜினியருக்கு தந்தை கண்முன்னே நேர்ந்த விபரீதம்!!
தொழிற்சாலையில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது கிரேன் கவிழ்ந்து இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். அந்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு ஒப்பந்தம் அடிப்படையில் கடலூரைச் சேர்ந்த கருணாகரன் வயது 53. இவர் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
அதேபோல் அவரது மகன் நடராஜன் வயது 22 ,என்பவரும் ஒப்பந்த அடிப்படையில் அதே தொழிற்சாலையில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று முன் தினம் தொழிற்சாலையில் கட்டுமான பணிகள் இன்ஜினியர் நடராஜன் மேற்பார்வையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென யாருமே எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் தந்தை கருணாகரன் கண் முன்னாடியே நடராஜன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்துச் சென்று நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிவடைந்து நடராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரின் உறவினர்கள் கவன குறைவால் உயிரிழப்பு நேர்ந்ததாக புகார் கூறி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,மேலும் உயிரிழந்த நடராஜன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். பிறகு போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை பெற்று சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.