ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!!

0
95

ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!!

ஆண்களின் விந்தணுக்கள் குறைந்து கொண்டே சென்றாள் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடும் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே செல்வது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இது நேரடியாக இனப்பெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு வகைகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது.

மனிதர்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படையான ஒன்றுதான் உணவு. உணவில் கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்று 99 ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிட்டால் விந்தணுக்கள் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது. உடலில் ஒமேகா 3 அளவு சரியாக இருப்பவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது. இந்த ஆய்வில் கொழுப்பு அதிகமாக உட்கொள்பவர்களின் விந்தணு எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாளுக்கு நாள் மனிதர்களின் விந்தணுக்கள் குறைந்து கொண்டே சென்றாள் மனித வாழ்வை அழிந்து விடக் கூடும் என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

எனவே விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதன் தரத்தை உயர்த்தவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாம்.

மிகவும் சூடான நீரில் குளிக்க வேண்டாம்.

மது அருந்துவதை நிறுத்த வேண்டும். மது அருந்துவதால் ஆண்களுக்கு இருக்கக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் மிகவும் பாதிப்படைகிறது.

எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. ஆனால் அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் இருக்க வேண்டும்.

இதற்கு குறைவாக தூங்கினால் விந்தணுக்களின் எண்ணிக்கை 31 சதவீதம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

விந்தணுக்களை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.

மாதுளை
மாதுளையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் உள்ளது. மாதுளை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வர டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே ஆண்கள் தினமும் ஒரு மாதுளை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு சாப்பிட்டு வரலாம்.

வாழைப்பழம்
இதில் இருக்கக்கூடிய ஒரு விதமான நொதி மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க கூடிய ஆற்றல் மிகுந்தது. எனவே ஆண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் சி ஆனது உடலில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது செல் இறப்பதை தடுப்பது, மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கது. எனவே விந்தணு குறைபாட்டை சந்திக்கும் ஆண்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

கிவி பழம்
கிவியில் மற்ற பழங்களில் இல்லாத அளவு அதிக அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த இரண்டு வைட்டமின்களுமே ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் உயர்த்தக்கூடிய பண்பு கொண்டது. எனவே ஆண்கள் தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது இது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்காற்று வருகிறது. எனவே ஆண்கள் இதை தினமும் ஒன்று எடுத்துக் கொள்ள விந்தணு எண்ணிக்கையில் நல்ல பலன் கிடைக்கும்.