இனி வீட்டு வாடகை தர வேண்டிய அவசியமே இல்லை!! Payslip இருந்தால் போதும்!!
ஒவ்வொரு மாதமும் நமக்கு வரக்கூடிய சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து இருக்கிறோமா? payslip யில் வரும் சம்பளமும் நம் அக்கவுண்டிற்கு வரும் சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை என்றைக்காவது பார்த்திருக்கிறோமா? முதலில் payslip சம்பளம் சரியாக வந்திருக்கிறதா என்பதை பார்த்திருக்கிறோமா?
குறிப்பாக ஒவ்வொரு ஆபீசிலும் payslip ஊழியர்களுக்கு கொடுத்திருக்கிறார்களா? இதை கண்டிப்பாக பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கிடையாது. ஆனால் பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் இதை கேட்டால் அவர்கள் கட்டாயமாக கொடுக்க வேண்டும்.
payslip இருந்தால் மட்டுமே ஒவ்வொரு மாதமும் நம் சம்பளத்தில் எவ்வளவு பணத்தை பிடிக்கிறார்கள் அதுபோக நமக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். இதை தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஊழியர்களின் உரிமையாகும் எனவே இந்த payslip ஐ நிறுவனத்திடம் கேட்டால் அவர்கள் கட்டாயமாக அதை ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த payslip யில் நமக்கு நிறைய பயன்களும் இருக்கிறது அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.
payslip என்றாலே அதில் மூன்று முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது CTC, gross salary, net salary.
1. CTC என்றால் ஒரு பணியாளரை ஒரு நிறுவனம் வேலைக்கு கெடுக்கிறது என்றால் அந்த பணியாளர்களுக்காக அந்த நிறுவனமானது என்னென்ன செலவுகளை செய்கிறது என்பதை தான் ctc என்று கூறுவோம்.
2. Gross salary- இதில் நிறைய விஷயங்கள் உள்ளது. அதாவது basic pay, HRA, DA, SA என்று நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. இதில் basic pay என்பது ctc ஐ பொறுத்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இது மாறும். அடுத்து HRA என்பது நீங்கள் உங்களுடைய பணத்தை வீட்டு வாடகையாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஒவ்வொரு நிறுவனமும் பணியாளர்களுக்கு வீட்டு வாடகை கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். அதை எப்படி தருவார்கள் என்றால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பேசிக் பேயின் மூலமாக மெட்ரோ சிட்டியில் வசிப்பதாக இருந்தால் 50 சதவிகிதம் இந்த வாடகை பணத்தை தருவார்கள். அதுவே நான் மெட்ரோ சிட்டியாக இருந்தால் பேசிக் பெயின் மூலமாக 40 சதவீதம் HRA வாக வழங்குவார்கள்.
இதனைத் தொடர்ந்து DA, SA இன்று நிறைய விஷயங்கள் இதில் உள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து வரக்கூடிய ஒரு தொகை தான் gross salary.
3. Net salary என்றால் நமது சம்பளத்தில் பி எஃப் இ எஸ் ஐ என்று நிறைய பெயரில் பணத்தை பிடிப்பார்கள். இந்த கிராஸ் சேலரியிலிருந்து இது அனைத்தும் பிடித்தது போக நம் கைக்கு வரக்கூடிய தொகையை நெட் சேலரி என்று கூறுகிறோம்.
எனவே இதன் மூலமாக நாம் முக்கியமாக தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒவ்வொரு மாதமும் payslip வருகிறதா என்பதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை வரவில்லை எனில் அதை நிறுவனத்திடம் நாம் கேட்க வேண்டும் அவர்கள் கட்டாயமாக அதை கொடுக்கவும் வேண்டும்.
இந்த பேஸ்லிப் வந்த பிறகு எல்லாம் சரியாகி இருக்கிறதா நம்முடைய சம்பளம் சரியாக இருக்கிறதா நம் முகவரிகள் சரியாக இருக்கிறதா என அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக HRA நமக்கு தருகிறார்களா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இது நம் வாழ்வில் முக்கியமான ஒன்றாகும் ஒருவேளை இதை தரவில்லை எனில் நாம் நிறுவனத்திடம் சென்று கேட்கலாம். எனவே இந்த பேஸ்லிப் பற்றி தெரியாத அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.