இதெல்லாம் ஒரு முதலமைச்சருக்கு அழகா!! பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!!
தற்போது மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாளை “என் மண், என் மக்கள்” என்னும் தலைப்பில் ராமேஸ்வரத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
இதை துவக்கி வைக்க அமித்ஷா வருகை தர இருக்கிறார். எனவே, ராமநாதபுரம் நாடாளுமன்ற பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
அடுத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறேன். இந்த நடைப்பயணத்தில் பிரதமர் மோடியின் மக்கள் சேவைகளை பற்றி அனைவருக்கும் கூற இருக்கிறேன்.
மேலும், அவரின் மக்கள் சேவை குறித்து புத்தகங்கள் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்க இருக்கிறேன். இதில், என்னுடன் பல கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த நடைபயணத்தின் போது இடையில் நடக்கக்கூடிய பொது கூட்டங்களில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த மந்திரிகளும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மேலும், அமலாக்கத்துறையை மட்டுமே கூறி கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் செய்யப்படுவதை பற்றி பதில் அளிக்க வேண்டும்.
என்னை தொட்டுப்பார், சீண்டிப்பார், மிரட்டிப்பார் என்று ஆணவமாக கூறுவது ஒரு முதல்வருக்கு அழகு இல்லை. மக்களுக்கு நல்லாட்சியை கொடுப்பதே அழகு.
எனவே, ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டம் எப்போதுமே தொடரும் என்று கூறி உள்ளார். மேலும், நாளை மிகவும் பிரம்மாண்டமாக எனது நடைப்பயணம் தொடர இருக்கிறது.
அதில் பல கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வது இன்னும் உறுதி படுத்தப்படவில்லை என்று புதிராக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறி உள்ளார்.