மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!!
ஆண்டிராய்டு போன்கள் மூலமாக தற்போது பண மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இப்போது போலியான ஏடிஎம் கார்டுகளை மக்களுக்கு தபால் மூலியமாக அனுப்பி அவர்களது பணத்தை சூறையாடி வருகின்றனர்.
இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான முகவரிகளை ஆன்லைனில் சேகரிப்பார்கள். பிறகு அவர்களுக்கு தபால் மூலியமாக போலியான ஏடிஎம் கார்டுகளை அனுப்பி வைப்பார்கள்.
அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு செல்போன் மூலமாக அழைப்பு விடுத்து உங்களுக்கு வங்கியில் இருந்து ஒரு OTP எண் வந்திருக்கூடும். அதை சொல்லுங்கள், அப்போது தான் உங்களின் ஏடிஎம் கார்டு ஆக்டிவ் ஆகும் என்று கூறுவார்கள்.
இதை கேட்டு நாம் அந்த OTP எண்ணை கூறி விட்டால் உடனடியாக வங்கிகணக்கில் உள்ள அனைத்து பணங்களையும் மோசடி கும்பல் எடுத்துக் கொள்ளும்.
நாம் ஏமாந்து விட்டோம் என்று நமக்கு புரிவதற்குள் அந்த மோசடி கும்பல் தலைமறைவாகி விடும். அவர்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மோசடி கும்பல்கள் இப்போது ஸ்கெட்ச் போட்டு வெளி செய்கிறார்கள்.
எனவே, பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், எந்த ஒரு நபராவது போன் செய்து உங்கள் ஓடிபி யை சொல்லுங்கள் என்றால் சொல்ல கூடாது எனக்கூறி சைபர் கிரைம் போலீசார் மக்களை எச்சரித்து வருகின்றனர்.
இதனைபோலவே, ஆன்லைனில் வொர்க் பிரம் ஹோம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி வருகின்றனர். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.