திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!!

Photo of author

By CineDesk

திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!!

CineDesk

Suddenly the helicopter fell into the sea!! 4 army soldiers magic!!

திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!!

ஆஸ்திரேயாவில் உள்ள பிரிஸ்பேன் பகுதியில் எம்ஆர்எச் 90  தைவான் வகை ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் இருந்தது. நான்கு ராணுவ வீரர்கள் உள்ளே இருக்க, பயிற்சி செய்த கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் இருந்த நான்கு பேரும், ஹெலிகாப்டர் கடலில் விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எவ்வளவு முயன்றும் கூட தண்ணீரில் மூழ்கிய நான்கு பேரை கண்டறிய முடியவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் கூறி உள்ளார். இருப்பினும் இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.

தண்ணீரில் மூழ்கி தொலைந்து போன இந்த நான்கு பேரை தேடி வருவதால் மொத்தம் முப்பதாயிரம் பேர் பங்கு வகிக்க கூடிய அமெரிக்காவின் ஆஸ்திரேலிய தாலிஸ் மேன் சைபர் கூட்டு பயிற்சியானது தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

எனவே, பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலோரப் பகுதியில் விழுந்தது அந்நாட்டில் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.

இதற்கு விமான குழுவினரின் அலட்சியம் காரணமா அல்லது ஹெலிகாப்டரில் எதேனும் பிரச்சனை இருந்ததா என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபோலவே கடந்த மாதம் நேபாளில் ஆறு பேர் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளானதால், அப்பகுதியில் ஹெலிகாப்டர் சேவை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.