மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!

0
34
Census Work Intensity!! Stop all this work!!
Census Work Intensity!! Stop all this work!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கரோனா பெருந் தொற்றின் காரணமாக சில ஆண்டுகளாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த வகையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எப்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும் என்று மத்திய உள்துறையின் கீழ் வரும் மக்கள் தொகை கனகெடுப்பு ஆணையர் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்பதற்காக நகராட்சிகள் ,வருவாய் கிராமங்கள் காவல் நிலையங்கள் ,வட்டங்கள் ,நகரங்கள் போன்றவற்றில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் அனைத்தும்  ஜூலை 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்னும் முடிவடையாததால்  அரசு இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதனால் இதனை  டிசம்பர் 31 தேதி வரை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஜெனரல் அறிவித்துள்ளார்.மேலும் டிசம்பர் மாதத்திற்குள் எல்லை தொடர்பான கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

author avatar
Parthipan K