நான் மக்களால் இங்கு நிற்கிறேன்!! அமித்ஷாவை நாக் அவுட் செய்த உதயநிதி!!

Photo of author

By CineDesk

நான் மக்களால் இங்கு நிற்கிறேன்!! அமித்ஷாவை நாக் அவுட் செய்த உதயநிதி!!

CineDesk

I stand here by the people!! Udayanidhi who knocked out Amit Shah!!

நான் மக்களால் இங்கு நிற்கிறேன்!! அமித்ஷாவை நாக் அவுட் செய்த உதயநிதி!!

திமுக கட்சியின் இளைஞர் அணிக்கான மாநில, மாவட்ட, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுக கூட்டமானது இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில், திமுக வின் இளைஞரணி மாநில செயலாளரான மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கட்சியில் இணையும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார். இதனையடுத்து இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலையின் பாத யாத்திரை துவக்க விழாவில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா அவர்கள்,

முதல்வர் ஸ்டாலின் தன் மகனான என்னை அடுத்த முதலமைச்சராக ஆக்குவதற்கு மிகவும் உழைப்பதாக கூறி இருக்கிறார். மேலும், இதைத்தான் முதல்வர் லட்சியமாக வைத்திருப்பதாகவும் பேசி இருக்கிறார்.

நான் மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இந்த அமைச்சர் பதவிக்கு வந்துள்ளேன். இப்போது நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்.

உங்கள் மகனான ஜெய்ஷா எவ்வாறு கிரிக்கெட்டில் சங்க தலைவராக சேர்ந்தார். அவர் எத்தனை கிரிக்கெட் போட்டியில் பங்கேர்த்தார்? அதில் எத்தனை ரன்கள் எடுத்தார்?

மேலும், உங்கள் மகனின் நிறுவன மதிப்பு 2014  ஆம் ஆண்டில் ரூபாய் 74 லட்சமாக இருந்துள்ள நிலையில், தற்போது அதன் மதிப்பு ரூபாய் 130 கோடியாக அதிகரித்துள்ளது.

இதை பற்றி நான் உங்களிடம் ஏதேனும் கேட்டேனா? நீங்கள் மட்டும் எதற்காக இப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அமித்ஷாவின் கருத்துக்கு தக்க பதிலடியை வழங்கினார்.