சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!
மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும்.
இது மட்டுமல்லாமல் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று துணி துவைப்பது பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்வதற்காக நீண்ட நேரம் இருந்தாலும் இந்த சேற்றுப் புண்கள் வரக்கூடும். மேலும் ஈரமான காலணிகளை நீண்ட நேரம் அணிவதாலும் இந்த சேர்த்து புண்கள் ஏற்படும்.
சேற்றுப் புண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும் மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும்.
சேற்றுப் புண் என்பதை நீர்ச் சிரங்கு என்றும் சொல்லுவார்கள். இது ஒரு பங்கஸ் கிருமியால் எற்படும் நோயாகும்.
எதற்கெடுத்தாலும் மருந்தகம் சென்று ஆயில்மெண்ட் வாங்கி பூசிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் இயற்கை முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு சிறு புன் வந்தால்கூட நம்மால் தன்னிச்சையாக மருந்துகளை தயார் செய்ய முடியாத காலகட்டமாக உள்ளது.
ஆனால் சேற்று புண்ணிற்கு நம் வீட்டில் உள்ள சில மூலிகைகளை வைத்தே நாம் மருந்துகளை தயார் செய்ய முடியும்.
அது விரைவில் அந்த புண் ஆறுவதற்கு உதவும். அப்படி எளிமையான வீட்டு வைத்திய முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மருதாணி
வேப்பிலை
மஞ்சத்தூள்
கல் உப்பு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு மருதாணி மற்றும் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு உங்களது சேற்றுப்புண் வந்த கால்களை ஒரு பக்கெட்டில் உங்கள் கால் முழுதும் வரை வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து உங்களது பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு துணி வைத்து உங்களது பாதங்களை துடைத்த பின்பு நீங்கள் அரைத்து வைத்திருந்த அந்த பேஸ்டை சேற்றுப்புண் வந்த இடத்தில் அப்ளை செய்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும்.