தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது

0
138
Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்
Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது

இன்று உலகையே ஆட்டிப் படைக்கின்றது கொரோனா வைரஸ் நோய். இந்த நோயால் தமிழகத்தில் இதுவரை 42 ஆக இருந்த எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 8 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மருத்துவக்குழு வீடுதோறும் சென்று மக்களைப் பரிசோதித்து வருகின்றனர். கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் வீட்டைச் சுற்றியுள்ள ஐந்து மீட்டர் தொலைவுவரை இருக்கும் வீடுகளில் பரிசோதனைச் செய்யப்படுகின்றன.

இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் பரிசோதனையின்போது 8 பேருக்குக் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றுக் கூறப்படுகிறது. இதில் பத்து மாதக் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 4 பேர் தாய்லாந்திலிருந்து வந்து ஈரோட்டில் சிகிச்சைப் பெற்றுவரும் வெளிநாட்டினர் நடத்தியக் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஐ எட்டியுள்ளது.

Previous articleஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. -மத்திய அரசு
Next articleஅடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!