மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

0
178

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

சீல் வைக்கப்பட்ட ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை மேல்பாதி வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் மனு அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் அளித்துள்ள புகாரின் பேரில் இன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தியது.

விசாரணையில் விழுப்புரத்தில் மேல்பாதி கிராமத்தில் உள்ள ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ தனியார் இடத்தில் இருக்கின்ற கோயில் அப்படி இருக்க இது தனியாருக்கு தான சொந்தமாகும். இதை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் எப்படி கொண்டுவரமுடியும்?இந்து அறநிலையத்துறையால் எப்படி அபகரிக்க முடியும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது முதல் கேள்வியை எழுப்பியது.

300 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயில் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஓபிசி சமூகத்திற்கு சொந்தமான குலதெய்வ கோயிலாக இருக்கும் பொழுது கோவிலை மூடிவைக்க யார் உத்தரவு கொடுத்தது கோயில் எதற்காக இரண்டு மாதங்களாக மூடி கிடக்கின்றது,வழிபாட்டு தளங்கள் விவகாரத்தில் இவ்வாறு நடந்து கொள்வது சரியா?கோயிலை சீல் வைப்பதற்க்கான உண்மையான காரணத்திற்கான ஆதாரத்தை இந்து சமய அறநிலையத்துறை வைத்துள்ளதா?

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் குலதெய்வ கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து அபகரித்து வருகின்றது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டதில் உள்ள மேல்பாதி கிராமத்தில் வன்னியர் சமூகத்திற்கு சொத்தாக இருக்கும் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை அபகரிக்கும் முயற்சியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏதெனும் முயற்சி செய்து வருகின்றதா ? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் இந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் விகாரம் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான விசாரணை இன்று நடைபெறுமென்று விழுப்புர மாவட்ட ஆட்சியருக்கு தெரியுமா? தெரியாதா? எதற்காக அவர் இந்த விசாரணையில் ஆஜராகவில்லை.அடுத்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் ஆஜராக வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

இது சாதாரண விஷயமல்ல கடந்து போவதற்கு ஒரு குறிப்பிட்ட ஓபிசி சமூகத்தின் குலதெய்வமாக இருக்கின்றது.இதனை கருத்தில்கொண்டு அவர்களுக்கு நியாயம் கிடைக்க நியாயமான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleஅடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!!
Next articleதளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!!