இதை ஒரு முறை தேய்த்தாலே போதும்!!உங்கள் பேன் ஈறு அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும்!!

0
95

இதை ஒரு முறை தேய்த்தாலே போதும்!!உங்கள் பேன் ஈறு அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும்!!

பெண்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமாக படிக்கும் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் தலையில் பேன். தலையை சரியாக பராமரிக்காமல் விடுவதாலும் இந்த பொடுகு பிரச்சனை தலையில் பேன் ஈறு முடி கொட்டுதல் என்று ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

தலையில் பேன் இருப்பதனால் முடி உதிர்வு பொடுகு பிரச்சனை முடி வளராமல் இருப்பது என்று ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தலையில் இருக்கக்கூடிய பேனை நிரந்தரமாக நீக்குவதற்கு ஒரு இயற்கையான வழிமுறையை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வேப்பிலை
தேங்காய் எண்ணெய்
பூண்டு
கற்பூரம்

வேப்பிலையில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இது சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த வேப்பிலையில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி ஃபங்கள் குணங்கள் இருக்கிறது.

இதனாலேயே இது தலையில் இருக்கக்கூடிய பொடுகு பேன் ஈறுகளை முற்றிலுமாக குணமாக உதவுகிறது. அடுத்ததாக பூண்டு, இந்த பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது மற்றும் இதன் வாசனை பேணிற்கு சுத்தமாக ஆகாது. எனவே தலையில் இருக்கக்கூடிய பேன் பிரச்சினையை தீர்க்க இது ஒரு சிறந்த தீர்வாகும்.

மேலும் இந்த பூண்டை தலைமுடியில் பயன்படுத்துவதால் முடியின் வேர்க்கால்கள் நன்கு வளமடைந்து அடர்த்தியாகவும் நீளமாகவும் கருமையாகவும் முடி வளர உதவுகிறது.

கற்பூரத்தின் வாசனையால் தலையில் இருக்கக்கூடிய பெண்கள் உடனடியாக இறந்து விடுகிறது. மேலும் தலையில் இருக்கக்கூடிய காயங்கள் தொற்றுகள் என அனைத்தையும் சரி செய்யக்கூடிய சக்தி கற்பூரத்திற்கு உள்ளது.

 

செய்முறை:
1. ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு அதை நிழலில் உலர்த்தி விடவும்.

2. வேப்பிலையில் இருக்கக்கூடிய ஈரப்பதம் போகும் வரை அதை உலர்த்தி விடவும்.

3. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும்.

4. தேங்காய் எண்ணெய் ஆனது சிறிதளவு சூடானவுடன் நம் உலர்த்தி வைத்திருக்கக்கூடிய வேப்பிலை இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.

5. வேப்பிலை இலையை சேர்த்து சிறிது நேரம் கொதித்த பின்னர் 5 அல்லது 6 பற்கள் பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

6. இவ்வாறு பூண்டை சேர்த்த பிறகு 5 லிருந்து 10 நிமிடங்களுக்கு இந்த எண்ணெயை நன்றாக கொதிக்க வைக்கவும்.

7. இவ்வாறு கொதிக்க வைத்த பின்னர் வெதுவெதுப்பான சூட்டில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

8. இந்த வடிகட்டிய எண்ணெயில் இரண்டு கற்பூரங்களை தூள் செய்து சேர்த்துக் கொள்ளவும்.

இவ்வாறு தயார் செய்த இந்த எண்ணையை தலையில் நன்கு அப்ளை செய்து நன்றாக சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். நன்கு மசாஜ் செய்து எண்ணெயை தலையில் முழுவதுமாக அப்ளை செய்த பிறகு ஒரு டவளையோ அல்லது ஒரு பிளாஸ்டிக் கவரையோ தலையில் சுற்றி 30 லிருந்து 40 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.

அதன் பிறகு கெமிக்கல் இல்லாத ஒரு ஹெர்பல் ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடவும். முதல் தடவை பயன்படுத்தும் போதே உங்களுக்கு தெரியும் முடி மிகவும் மிருதுவாக பொடுகு மற்றும் பேன்கள் இல்லாமல் காட்சியளிக்கும்.

எனவே தலையில் பேன் பிரச்சனையை தீர்ப்பதற்கு செயற்கையான முறையில் நிறைய மருந்துகளையும் ஷாம்புகளையும் பயன்படுத்துவதே நிறுத்திவிட்டு இவ்வாறு இயற்கையான முறையில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே இந்த எண்ணெயை தயார் செய்து அப்ளை செய்து வந்தால் உடனடியாக பொடுகு பிரச்சனை பேன் ஈறு தொல்லை என அனைத்தும் சரியாகிவிடும்.

 

Previous articleஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!
Next articleவெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!