அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

0
106
Sale of tomatoes in all rations from today!! Tamil Nadu government strange announcement!!
Sale of tomatoes in all rations from today!! Tamil Nadu government strange announcement!!

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

தமிழகத்தில் சில மாதங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினமும் முயற்சி செய்து வருகிறது.

இது குறித்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது, முதல் அமைச்சரின் உத்தரவின் கீழ், கூட்டுறவுத்துறையின் மூலமாக தக்காளி விலையை கட்டுப்படுத்த தினமும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை பெய்ததால் அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள மொத்தம் 302  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூறி இருந்த நிலையில், தற்போது 500  ரேஷன் கடைகளில் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டு, இன்று துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 100  ரேஷன் கடைகளிலும் அதேபோல கோவை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20  கடைகளிலும், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 15  கடைகளிலும் வழங்கப்பட்ட உள்ளது.

மேலும் கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுகோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பத்து ரேஷன் கடைகளிலும்,

அதேப்போல, அரியலூர், கன்னியாகுமாரி, நீலகிரி, ராணிபேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் பகுதிகளில் ஐந்து ரேஷன் கடிகளிலும் என தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 500  ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கிறது.

இன்று முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60  க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

எனவே, வெளி மாநிலங்களில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு தான் இதற்கு காரணம். முதல் அமைச்சரின் மேற்பார்வையில், இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தினம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Previous articleஅயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு!!
Next articleவரலாற்றின் முதல் முறையாக 6. 5 கோடி பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!