அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு!!

0
66

 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு…

 

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்

 

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் மூன்று டி20 போட்டிகளும் அயர்லாந்து நாட்டில் டப்ளின் பகுதியில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23ம் தேதியும் நடைபெறவுள்ளது.

 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரால் இந்திய அணிக்கு புதிய கேப்டனை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக பல மாதங்களாக ஓய்வில் இருந்த இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்து வந்த ஜஸ்பிரித் பும்ரா அவர்கள்தான் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அவர்களும் அணிக்கு திரும்பியுள்ளார்.

 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி…

 

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட்(வைஸ் கேப்டன்), யஷஸ்வி ஜெய்சிவால், ரிங்கு சிங், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் டுபே, வாசிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹமது, ரவி பிஷ்னோய், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.