மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

0
141

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

 

ஹரியானா கேட்லா மோட் பகுதியில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் நடத்தப்பட்ட மத பேரணியாளர்களுக்கும்,அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மத ஊர்வலம் வன்முறையாக மாறியது.

 

ஹரியானா, ஹரியானா மாநிலம் ‘குருகிராம்’ மற்றும் ‘நூ’ மாவட்டத்தில் நேற்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் மத பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேரணி ‘நூ’ மாவட்டத்தின் ‘கேட்லா மோட்’ என்ற பகுதியில் சென்ற போது அவ்விடத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மாற்று மதத்தினர் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று எச்சரித்து பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேரணியில் ஈடுபட்டவர்களும் கல் வீச்சு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தியதால் மத ஊர்வலம் கலவரமாக மாறியது.மேலும் இருபிரிவினரும் அப்பகுதியில் இருந்த பொதுச்சொத்துக்களை தீயிட்டு கொளுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இந்த தாக்குதலிலிருந்து தப்பித்து ஏராளமானோர் அருகிலிருந்த பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பாதுகாப்பிற்கு வந்த ஊர்க்காவல் படை காவலர் இருவர் பலியாகிய நிலையில்,பலர் காயமடைந்தனர்,மேலும் இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.இந்நிலையில் இந்த வன்முறையை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவலர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் ‘நூ’ மாவட்ட மத ஊர்வலம் கலவரமாக மாறிய தகவல் அண்டை மாவட்ட குருகிராமிற்கு பரவியதையடுத்து அங்கிருந்தவர்கள் வாகனங்கள்,கடைகளுக்கு தீ வைத்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ‘நூ’ மாவட்டத்திற்கு 144 தடை பிறப்பித்து,வன்முறை பற்றி வதந்தி பரவாமல் இருக்க இணையவசதி முடக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அதிவிரைவு படையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இந்த மத கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அமைதிக்காக்க வேண்டுமென்று அம்மாநில உள்துறை மந்திரி ‘அனில் விஜ்’ வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிலையில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ மத பேரணியாளர்களை கேட்லா மோட்டில் வசிக்கும் சமூகத்தினர் ‘மாற்று மதத்தினர் உள்ளே வரக்கூடாது’ என்று தடுத்ததால் ஏற்பட்ட கலவரத்தால் ஹரியானா முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவுகின்றது.மேலும் ஹரியானா இன்னொரு மணிப்பூராக மாறிவிடுமோ என்று அனைவரும் கலக்கமடைந்துள்ளனர்.

Previous articleதளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா??
Next articleவிரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…